முன்னணி நடிகர்கள் படம் ஓடும் ஆனால் மற்றவர்கள் நிலைமை.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர் பார்த்திபன்
இயக்குனர் பார்த்திபன்
கமர்ஷியல் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படங்களை இயக்கும் திறமை கொண்டவர் இயக்குனரும், தயாரிப்பாளரும்,நடிகருமான பார்த்திபன்.

தன் திருமணம் குறித்து பேசிய நடிகை சாய் பல்லவி.. வெளிப்படையாக தன் அப்பாவிடம் கூறிய பதில், என்ன தெரியுமா ?
கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின் புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனரானார்.
இதை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களை இயக்கி வெற்றியை பார்த்த இயக்குனர் பார்த்திபன் இரவின் நிழல் படத்திற்கு பின் டீன்ஸ் என்ற படத்தினை இயக்கினார்.
விமர்சகர்கள் குறித்து பார்த்திபன்
இந்த நிலையில், பார்த்திபன் விமர்சனங்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில், "சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு வந்த பலர் அது நிறைவேறாத நிலையில், கேமராக்களை வைத்துக் கொண்டு விமர்சிக்க தொடங்கி விட்டனர்.
தற்போது, இருக்கும் காலகட்டத்தில் ஒரு படம் வெளிவருவதற்கு முன்னதாகவே அந்த படம் குறித்து பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. இந்த விமர்சனங்களின் தாக்கத்தால் படம் பார்ப்பதற்கு முன்பே அந்த படம் குறித்து ஒரு பிம்பத்தை ரசிகர்கள் ஏற்படுத்தி கொண்டு படம் பார்க்க செல்கிறார்கள்.
அந்த படம் நல்ல படமா, இல்லையா என்பதை முன்னதாகவே கணித்து விடுகின்றனர். இதனால்,வெகுவாக பாதிக்கப்படுவது திரைப்படங்களின் வசூல்தான்.
மேலும், விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களால் எப்படியாவது திரையரங்குகளில் ஓடி விடுகின்றன.
ஆனால் சிறிய பட்ஜெட்டில் புது நடிகர்களை கொண்டு எடுக்கப்படும் படங்கள் இந்த விமர்சனங்களால் அடி வாங்குகின்றன" என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
