பருத்திவீரன் படத்தில் சின்ன முத்தழகாக நடித்தவரா இவர்... இப்போது எப்படி உள்ளார் பாருங்க
பருத்திவீரன்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிய நிறைய சிறந்த படங்கள் உள்ளது. அப்படி 2007ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது.
நடிகர் கார்த்தியின் முதல் படம் இது, அவருடன் பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.
100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றிப்பெற்ற இப்படம் இன்று வரை முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. மதுரை பேச்சு , நடை, பாவனை, தோரணை என கதைக்கு தேவையான ஒட்டு மொத்தத்தையும் திரையில் காண்பித்திருப்பார் இயக்குனர் அமீர்.
சிறிய முத்தழகு
இந்த படத்தில் பிரியாமணியை தமிழ் ரசிகர்கள் முத்தழகாக மிகவும் ரசித்தார்கள், மக்கள் மத்தியில் மிகவும் ரசிக்கப்பட்டது.
இந்த படத்தில் அறியாத வயசு புரியாத மனசு பாடலில் சின்ன முத்தழகாக ஒரு சிறுமி நடித்திருப்பார். அவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அட சிறுவயது முத்தழகா இது என ஆச்சரியமாக ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
