ப்ளாக் பஸ்டர் ஹிட்டான பருத்திவீரன் படத்தின் உண்மையான வசூல் இதுதான்.. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிய தகவல்
கார்த்தி - பருத்திவீரன்
எந்த ஒரு நடிகருக்கும் நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுப்பது அவருடைய முதல் படம் தான். அப்படி இன்று வரை நடிகர் கார்த்தியின் அடையாளமாக இருக்கிறது பருத்திவீரன்.
ஞானவேல் ராஜா தயாரிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் கார்த்தி. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ப்ரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

முதல் படமே மாபெரும் வெற்றியை கார்த்திக்கு பெற்றது தந்தை நிலையில், வசூலும் எதிர்பார்த்ததை விட மாபெரும் சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்தது.
உண்மையான வசூல்
இந்நிலையில், பருத்திவீரன் படத்தின் உண்மையான மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் பருத்திவீரன் படத்தின் மொத்த வசூல் மட்டுமே ரூ. 25 கோடி என குறிப்பிட்டுள்ளார். ரூ. 4.85 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மொத்தமாக ரூ. 25 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அன்றைய காலகட்டத்தில் அறிமுக நடிகரின் திரைப்படம் ரூ. 25 கோடி வரை செய்வது என்பது சாதாரணமான ஒரு விஷயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri