பருத்திவீரன்
இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பருத்திவீரன். இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார்.

மேலும் ப்ரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் ஆல்பம் சூப்பர்ஹிட்டானதை அனைவரும் அறிவோம்.
லட்சுமி அம்மாள்
இந்த ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல் 'ஊரோரம் புளியமரம்'. இந்த பாடலை கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் பாடியிருந்தார். அவரே அந்த பாடலில் நடித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை பாடியதன் மூலம் அவர் பிரபலமானார்.

இந்த நிலையில், கிராமிய பாடகி லட்சமி அம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் வயது 75. இவருடைய மரணம் ரசிகர்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.