எல்லா நடிகைகளும் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றவங்களா? கொந்தளித்த தங்கலான் பார்வதி
சமீபத்தில் மலையாள சினிமாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஹேமா கமிட்டியின் அறிக்கை.
அதில் சினிமா துறையில் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்கிற பெயரில் பாலியல் தொல்லையை சந்திப்பது உண்மை தான் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
2017ல் பிரபல நடிகை காரில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என நடிகைகள் கேட்டதால் அரசு ஹேமா கமிட்டியை அமைத்தது.
தற்போது அந்த கமிட்டியின் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நடிகைகள் புகார் கொடுத்தால் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்து இருக்கிறது.
பார்வதி ஆதங்கம்
இந்நிலையில் இந்த சர்ச்சையால் ஒட்டுமொத்த மலையாள சினிமா துறையை தவறாக எல்லோரும் பேசுகிறார்கள் என நடிகை பார்வதி கொந்தளித்து இருக்கிறார்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார் பார்வதி. இந்த சர்ச்சை பற்றி பேசிய அவர் எல்லா நடிகைகளும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தவர்கள் தான் என்கிற மனநிலையில் பேசுகிறார்கள் என அவர் கோபமாக பேசி இருக்கிறார்.
மேலும் தான் கடந்த 6-7 ஆண்டுகளாக இது பற்றி குரல் கொடுத்து வருவதால் தனக்கு மலையாள சினிமாவில் வாய்ப்புகள் யாரும் தருவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
