ஆமா, காதலி வயதில் மூத்தவர் தான்.. பசங்க நடிகர் கிஷோர் ஓபன்டாக்
பாண்டியராஜ் இயக்கத்தில் 2009 -ம் ஆண்டு வெளியானது பசங்க திரைப்படம். இதில் அன்புகரசு என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் கிஷோர்.
இதன் பின் கோலி சோடா, துரோகி போன்ற படங்களிலும் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 'ஹவுஸ் ஓனர்' என்ற படம் வெளியானது .
திருமணம்
ப்ரீத்தி குமார், 'ஆபீஸ்' என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் லட்சுமி கல்யாணம், வள்ளி, தெய்வம் தந்த வீடு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் கிஷோர், சமீபத்தில் சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அதில் விரைவில் திருமணம் செய்ய காத்திருக்கின்றேன் என பதிவிட்டிருந்தார்.
மூத்தவர் தான்
கிஷோரை விட ப்ரீத்தி நான்கு வயது மூத்தவர் இதனால் பலரும் பல வித கமன்ட் செய்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பதில் அளித்த அவர், " என்னைவிட ப்ரீத்தி வயதில் மூத்தவர் தான். எங்க வீட்டில் இதனால் பிரச்சனை ஒன்றும் இல்லை. சிலர் தான் இதை வைத்து தவறாக கமன்ட் செய்தனர். ஆனால் நான் இந்த கமன்ட்களை பெரிதாக எடுத்து கொள்வதில்லை" எனக் கூறியிருந்தார்.
விஜய் மற்றும் சங்கீதா 22 வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெறுகிறார்களா? - முற்றுப்புள்ளி வைத்த தகவல்