ஷாருக்கானின் பதான் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடிகளா.. பிரம்மிக்க வைக்கும் வசூல் சாதனை
பாலிவுட் சினிமாவின் டாப் நடிகராக திகழ்பவர் தான் ஷாருக்கான். சமீபத்தில் இவர் நடிப்பில் பதான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருந்தனர்.
பதான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பல எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் சிலர் படத்தின் பேனர்கள், போஸ்ட்டர்களை கிழித்து எறிந்தனர். இதையெல்லாம் கடந்து தான் பதான் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

வசூல் சாதனை
பதான் திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில் இதுவரை பதான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1060 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சமீபகாலமாக பாலிவுட் சினிமா பல தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில், பதான் படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட் சினிமாவின் தரத்தை உயர்த்தியுள்ளது.

பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri