ஷாருக்கான் படத்தின் ட்ரைலரை வெளியிட்ட நடிகர் விஜய், கூட்டணி உறுதியா
பதான்
ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பதான். இப்படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வழக்கமாக எந்த நடிகருடைய படத்தின் ட்ரைலரையும் வெளியிடாத விஜய், திடீரென ஷாருக்கான் படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
உறுதி செய்த விஜய்
ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் விஜய் கேமியோ ரொலில் நடிக்கிறார் என தகவல் வெளிவந்தது. அதன்படி, அது உண்மை தான் என்றும், விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

அதை உறுதி செய்யும் விதமாக இந்த ட்ரைலரை விஜய் வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கின்றனர். விரைவில் ஜவான் படக்குழுவிடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Wishing @iamsrk sir and the team all the best for #Pathaan
— Vijay (@actorvijay) January 10, 2023
Here is the trailer https://t.co/LLPfa6LR3r#PathaanTrailer
துணிவு படத்திற்காக நடிகை மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா