பதான் திரைவிமர்சனம்
கதைக்களம்
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக, இந்தியா மீதான தாக்குதலுக்குத் திட்டமிடுகிறார் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி. இதற்காக ஜிம் {ஜான் ஆபிரகாம்} என்பவனை நியமிக்கிறார்.
‘ரா’ உளவாளி பதான் {ஷாருக் கான்}, ஜிம்மின் தாக்குதலை முறியடிக்கப் புறப்படுகிறார். பாக். உளவாளி ருபீனாவும் {தீபிகா படுகோன்}, பதானுடன் இணைகிறாள். இருவரும் ஜிம் தொடர்பான ரகசியம் ஒன்றை அறிய ரஷ்யா செல்கிறார்கள்.
அங்கு அவர்களுக்குக் கிடைப்பது என்ன? ஜிம்மின் தாக்குதல் திட்டத்தை பதான் முறியடித்தாரா? இல்லையா என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாலிவுட் திரையுலகிற்கு உயிர் கொடுத்துள்ளது பதான். ஆம், கடந்த பல ஆண்டுகளாக ஒரு ப்ளாக் பஸ்டர் திரைப்படம் கூட ஹிந்தி திரையுலகில் வெளிவரவில்லை.
இதனால் பாலிவுட் திரையுலக ரசிகர்கள் சோகத்தில் இருந்ததார்கள். சரியான நேரத்தில் வந்து களமிறங்கி, பாலிவுட் திரையுலகை மீர்ந்தெடுத்துள்ளார் கிங் கான் ஷாருக்கான். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். வசனமும் தெரிகிறது.
ஷாருக்கானுக்கு இணையான ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார் தீபிகா படுகோன். வில்லனாக வரும் ஜான் ஆபிரகாம் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
படத்தில் அமைக்கப்பட்டுள்ள செட், அதை மிஞ்சும் அளவிற்கு VFX காட்சிகள் என சூப்பராக கையாண்டுள்ளார் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். அதே போல் கிளாமர், காதல் என அனைத்தையும் ரசிகர்களை கவரும் வகையில் வைத்துள்ளார்.
ஆனால், என்ன கொஞ்சம் லாஜிக் பார்த்து எடுத்திருக்கலாம். ஓவர் மசாலா கலந்த காட்சிகள், இரண்டாம் பாதியின் தொய்வு படத்திற்கு மைனஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது.
இடைவேளை காட்சியில் சல்மான் கான் என்ட்ரி மிரட்டல்.தற்போது ட்ரெண்டாகும் மல்டிவேர்ஸ் ரசிகர்களுக்கு இது செம குஷியை கொடுக்கும். பின்னணி இசை சூப்பர். எடிட்டிங் பக்கா..
முதல் மனைவியை விவாகரத்து செய்தது ஏன்? முதன்முறையாக கூறிய சீரியல் நடிகர் பப்லு