பத்து தல படம் தயாரிப்பாளருக்கு லாபமா? இல்லை நஷ்டமா? உண்மையை உடைத்த முக்கிய நபர்
பத்து தல
சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பத்து தல.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும், வெளிவந்த முதல் வாரத்தில் வசூலை குவித்தது.

இப்படி இருக்க கடந்த சில நாட்களாக பத்து தல திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கவில்லை என்பது போல் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
லாபமா? நஷ்டமா?
இந்நிலையில், இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் CEO பேசியுள்ளார்.
இவர் கூறியதில் பத்து தல படம் வெளியாவதற்கு முன்பே எங்களுக்கு லாபத்தை கொடுத்துவிட்டது என்றும், வெளிவந்த பின் ஓரளவு நல்ல லாபத்தை எட்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் பத்து தல படம் நஷ்டம் என்று பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை சிம்புவின் திரை வாழ்க்கையில் இல்லாத அளவிற்கு அதிக லாபத்தை கொடுத்த படமும் பத்து தல என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பிரசாந்திற்கு இரண்டாவது திருமணம் எப்போது?- அவரது தந்தை ஓபன் டாக்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri