2 நாட்களில் Patriot படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
Patriot
மலையாள சினிமாவின் இரு மாபெரும் தூண்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்து கடந்த மே 1ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் Patriot.

இப்படத்தை மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியிருந்தார். இப்படத்தில் பகத் பாசில், நயன்தாரா, ரேவதி, ராஜிவ் மேனன், குஞ்சாக்கோ போபன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
வசூல்
மல்டி ஸ்டாரர் திரைப்படமாக ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த Patriot ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், Patriot திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் 2 நாட்களில் இப்படம் ரூ. 42 கோடி வசூல் செய்துள்ளது.