பாவனி ரெட்டிக்கு பிக் பாஸ் வாய்ப்பு வாங்கி கொடுத்த டாப் ஹீரோ? ஐயோ இது தெரியாம போச்சே
விஜய் டிவி சீரியல்கள் ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட சேரியல்களில் நடித்து பாப்புலர் ஆன பாவனி ரெட்டி தான் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்று இருக்கிறார். அவரது முதல் கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாவனி அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவன் குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டான் என கூறி இருந்தார் பாவனி.
அவர் தற்கொலைக்கு பிறகு ஆனந்த் ஜாய் என்பவர் உடன் பாவனி நெருக்கமாக இருந்திருக்கிறார். முதல் கணவர் பிரதீப் உடன் பல வருடங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அதன் பின் திருமணம் செய்து கொண்டது போல் ஆனந்த் ஜாய் என்பவர் உடனும் அவர் சென்னை வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார் என கூறப்படுகிறது. அதன் பின் இரண்டாம் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என சொல்லி பிரிந்துவிட்டதாக பாவனி தான் பிக் பாஸ் வீட்டிலேயே கூறினார்.
இந்நிலையில் பாவனிக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நடிகர் சிம்பு தான் என கூறப்படுகிறது. பாவனியின் இரண்டாவது காதலர் அனந்த் ஜாய் சிம்புவுடன் நெருக்கமாக இருப்பவர் தானாம். அதனால் சிம்பு தான் பாவனிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது.