மீரா மிதுன் நடித்த கதாபாத்திரத்தில் பிக் பாஸ் பிரபலம் பவானி ரெட்டி! ரசிகர்களை கவர்ந்த ட்ரைலர்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5.
இதில் கலந்து கொண்டு பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பவானி ரெட்டி, இவர் சின்னத்திரையில் பல முக்கிய சீரியல்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி போட்டியை நெருங்கியுள்ள நிலையில், பவானி ரெட்டி இறுதி போட்டிக்கு செல்வாரா அல்லது பாதியிலே வெளியேறிவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் தற்போது பவானி ரெட்டி நடித்துள்ள திரைப்படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியாகியுள்ளது. சேனாபதி என பெயரிடப்பட்டுள்ள தெலுங்கு படத்தில் தான் பவானி ரெட்டி நடித்துள்ளார்.
இப்படம் தமிழில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மீரா மிதுன் தமிழில் நடித்துள்ள கதாபாத்திரத்தில் தான் பவானி ரெட்டி நடித்துள்ளார்.
இதோ அந்த புதிய ட்ரைலர்..