திருமணத்திற்கு பின் வேறொரு காதலா! - விளக்கமளித்த பாவனி ரெட்டியின் சகோதரி..
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து போட்டியாளர்களில் ஒருவர் பாவனி ரெட்டி, சமீபத்தில் அவர் தனது கணவர் மறைவு குறித்த உருக்கமான கதையை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து பாவனி ரெட்டி குறித்து பல வதந்திகள் இணையத்தில் தொடர்ந்து பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாவனி ரெட்டியின் மூத்த சகோதரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "பாவனி பற்றியும் அவள் உறவுகளைப் பற்றியும் சமூக ஊடகங்களில் பரவி வரும் சில போலி செய்திகளையும் சர்ச்சைகளையும் தெளிவுபடுத்தி விளக்க விரும்புகிறேன். அவளது கணவர் பிரதீப்குமார் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு மறுமணம் செய்துகொள்ளவில்லை.
அவள் கணவர் மீது மிகவும் பாசத்துடன் இருந்தாள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான தம்பதியராக்த் தான் இருந்தனர். அவர் மறைவிற்குப் பிறகும் அவர் நினைவுகளை அவளை விட்டு நீங்கவில்லை. அவருடன் அவர் வாழ்ந்த நாட்கள் அவளுக்கு என்றென்றும் பசுமையான நினைவுகளை கொண்டிருந்தது.
ஆனால் சமீபகாலமாக வேறு ஒருவரை விரும்பினாள். நாங்கள் குடும்பமாக அவளின் விருப்பப்படியே அவளுக்கு நல்ல வாழ்கையை அமைத்து தர விரும்பினோம். ஆனால் சில பல காரணங்களால் பரஸ்பர புரிதலுடன் சுமூகமாக பிரிந்தனர்.
அவள் கடந்த நான்கு வருடங்களாக தனது கணவரின் மறைவிற்குப் பின் தனது வாழ்க்கையை மிக கண்ணியமாக, தைரியமாக வாழ கற்றுக்கொண்டாள். தனது தொழிலில் முன்னுக்கு வந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக உள்ளார்.
எனவே அனைத்து ஊடக பணியாளர்களும் ரசிகர்களும் மற்றும் அவளுடைய நலன் விரும்பிகளும் அவருடைய உணர்வுகளையும் தனிநபர் உரிமைகளையும் மதித்து அவளின் இந்த பயணத்தில் உங்கள் ஆதரவை இன்று போல் என்றும் அளிக்குமாறு நாங்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri