மணிமேகலைக்கு பயம்.. பிரியங்கா செய்தது இதுதான்! - ஆதரவாக வந்த பிக் பாஸ் பிரபலம்
மணிமேகலை குக் வித் கோமாளி ஷோவில் இருந்து விலகுவதாக அறிவித்து, அதற்கு காரணம் பிரியங்கா தன்னை வேலை செய்ய விடாமல் குறுக்கிட்டு கொண்டே இருக்கிறார் என கூறி இருந்தார்.
அவர் வெளியேறியது தைரியமான முடிவு என மணிமேகலைக்கு ஆதரவாக பல பிரபலங்கள் பேசி வருகின்றனர். அனிதா சம்பத் தொடங்கி தர்ஷா குப்தா, பிக் பாஸ் ஷிவின், ஐஸ்வர்யா தத்தா வரை பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக பேசி இருக்கின்றனர்.
பிரியங்காவுக்கு ஆதரவாக வந்த பாவனி
இந்நிலையில் பிக் பாஸ் ஷோவில் இருந்து பிரியங்காவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகை பாவனி ரெட்டி தற்போது இந்த சர்ச்சையில் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
"மணிமேகலைக்கு தான் insecurity, (தன் வேலை போய்விடுமோ என்ற பயம்), பிரியங்கா ஒன்றும் dominant ஆக இல்லை. உண்மை வெல்லும்" என பாவனி ரெட்டி பதிவிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் ஷோவில் சந்தித்துக்கொண்ட பாவனி மற்றும் அமீர் இருவரும் தற்போது காதலர்களாக வலம் வர பிரியங்கா தான் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
