வலியால் துடித்த பாவனிக்கு அறுவை சிகிச்சை!.. அட பாவமே இவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி.
இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இந்நிலையில் பாவனி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், என் வாழ்க்கையின் இந்த 15 நாட்களைக் கழிப்பது மிகவும் கடினமாக இருந்தது. என்னுடைய கழுத்தில் சிறிய வலியுடன் இந்த பிரச்சனை தொடங்கியது. மேலும் வலி நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது.
நான் பல எலும்பியல் நிபுணரிடம் ஆலோசித்தேன், என் பிசியோதெரபியை ஆரம்பித்தேன், ஆனால் வலி தாங்க முடியாமல் போனது. நான் பல தூக்கமில்லாத இரவுகளை கழித்த வலியால் அழ ஆரம்பித்தேன், இடையில் எனக்கு படப்பிடிப்புகள் கூட இருந்தன. ஓய்வு எடுக்க எனக்கு விருப்பம் இல்லை.
அதனால் இந்த வலியுடன் வேலையைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஹைதராபாத் பறந்தேன். மேலும் எனது படப்பிடிப்பில் இருந்தவர்கள் மிகவும் ஆதரவாக இருந்து என்னை வீட்டைப் போல் உணர வைத்தனர். அப்படித்தான் எனது படப்பிடிப்பை முடித்தேன்.
நான் தினமும் என் பிசியோதெரபியைத் தொடர்ந்தேன், ஆனால் வலி இன்னும் மோசமாகிவிட்டது, இறுதியாக டாக்டர் சுகுமார் அவர்களால் செய்யப்பட்ட இந்த (எண்டோஸ்கோபிக் டிஸ்கெக்டமி) அறுவை சிகிச்சையை முடித்தேன், இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
தற்போது இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல் அளித்து வருகின்றனர்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
