குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பவித்ரா- இதனால் தானா, வீடியோவுடன் இதோ
ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக ரசித்து பார்த்து வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2. இதில் பங்குபெறும் பிரபலங்களுக்கு தான் ரசிகர்கள் கூட்டம் இப்போது அதிகமாக இருக்கிறது.
அவர்கள் எங்கு சென்றாலும் மக்கள் பெரிய வரவேற்பு கொடுக்கிறார்கள். ஆனால் இதில் என்ன சோகம் என்றால் இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சியே முடியப் போகிறது.
இந்த வாரம் முடிந்துவிடும், அடுத்த வாரம் முடிந்துவிடும் என்று மக்கள் ஒரு கணக்கு போட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மக்களை இன்னும் சில தினங்கள் சந்தோஷப்படுத்தலாம் என நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
போட்டியாளர்கள் தங்களது உறவினர்களை இந்த வார நிகழ்ச்சியில் அழைத்து வந்துள்ளார்கள். புரொமோக்கள் எல்லாம் கலகலப்பாக உள்ளது.
ஆனால் ஒரு குட்டி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பவித்ரா திடீரென கண்ணீர்விட்டு அழுகிறார்.
காரணம் அவரது அம்மா நியாபகம் வந்ததால் அழுதுள்ளார். இதோ அந்த எமோஷ்னல் வீடியோ,