8 மணி நேரத்துக்கு 500 ரூ.. காசுக்காக அதை செய்வேனா?.. உண்மையை உடைத்த CWC பவித்ரா
பவித்ரா லட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர் தான் பவித்ரா லட்சுமி.
இதையடுத்து இவர், சதிஷ் நடிப்பில் 2022 -ம் ஆண்டு வெளியான நாய் சேகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பவித்ரா, நான் நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடுவதற்கு காரணம் சம்பளம் கிடையாது. அந்த நிகழ்ச்சி மூலமாக ஒரு அங்கீகாரம் கிடைத்து விடாதா? என்பதற்காக மட்டும் தான்.
ஆனால் சிலர், நீ காசு கொடுத்த என்ன என்ன வேணாலும் பண்ணுவியா? எங்க வேணாலும் போவியா என்று பேசுகிறார்கள். அப்படி சொல்லும் போது வேதனையாக இருக்கிறது. நிகழ்ச்சியில் அவ்ளோ சம்பளம் கிடைக்காது. 8 மணி நேரம் ஆடினால் 500 ரூபாய் கிடைக்கும். சம்பளத்தை தாண்டி அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக நிகழ்ச்சியில் நடனமாடினேன் என்று பவித்ரா.
