எதிர்பாராத விபத்தால் வந்த பிரச்சனை.. குக் வித் கோமாளி பவித்ரா வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டமா
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர் தான் பவித்ரா லட்சுமி.
இதையடுத்து இவர் நடிகர் சதிஷ் நடிப்பில் 2022 -ம் ஆண்டு வெளியான நாய் சேகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.
பவித்ரா தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாள படத்திலும் நடித்துள்ளார்.
பவித்ரா உருக்கம்
இந்நிலையில் பவித்ரா தன் வாழக்கையில் நடந்த மோசமான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், " என்னுடைய சிறுவயதிலிருந்து எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் என்னுடைய அம்மாவிற்கு இந்த விஷயம் பிடிக்காது".
"அம்மா என்னை எப்போதும் நன்றாக படிக்க சொல்லுவார். நானும் அம்மா படுகின்ற கஷ்டத்தைப் பார்த்து நன்றாக படிக்க தொடங்கினேன். நான் சென்னைக்கு வந்த பிறகு எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. அப்போது முகம் மற்றும் கால்கள் மோசமாக அடிபட்டு இருந்தது".
"என்னுடைய முகத்தில் ஆபரேஷன் நடந்து முடிந்த பிறகு முகத்தை கண்ணாடியில் பார்க்க கூட பிடிக்கவில்லை. இந்த விபத்து குறித்து என்னுடைய அம்மாவிடம் ஆரம்பத்தில் கூறவில்லை" என்று பவித்ரா உருக்கமாக கூறியுள்ளார் .
விஜய்க்கு நன்றி சொன்ன லோகேஷ்.. பிறந்தநாளுக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுத்தார்?

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
