பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா நடிகை பவித்ரா லட்சுமி.. தீயாக பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி
பவித்ரா லட்சுமி
சின்னத்திரையின் மூலம் பிரபலமாகி, பின் வெள்ளித்திரையில் நடிக்க துவங்கியவர் பவித்ரா லட்சுமி.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.சதீஸ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டவராகவும், அதனால் ஏற்பட்ட உடல் அலர்ஜியால் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை பவித்ரா லட்சுமி.
விளக்கம் கொடுத்த நடிகை
அவர் கூறியதாவது, "நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன் என்பது உண்மை இல்லை. அதே போல் நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு எந்த சிகிச்சையும் பெறவில்லை. சமூக ஊடகங்களில் இதுபோன்ற வந்தந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். உங்களுடைய பொழுது போக்கிற்காக என் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம். எனக்கு ஒரு எதிர்காலம் உள்ளது. இதுபோன்ற வந்தந்திகளை பரப்பி அதை நீங்கள் கடினமாக்க வேண்டாம்" என கேட்டு கொண்டுள்ளார் பவித்ரா.