முதன்முறையாக திரைப்படத்தில் நடிக்கவுள்ள சீரியல் நடிகை பவித்ரா !
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பவித்ரா, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ஆபீஸ், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
மேலும் ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி கொண்டார் நடிகை பவித்ரா.
இந்த தொடர் 800 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்தது. மேலும் தற்போது தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சின்னத்திரையில் கலக்கி வரும் பவித்ரா விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் என்றும் அதன் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Making a Interesting ,Successive & Impressive Mark in Small Screen #AzhagiyaThendral #அழகியதென்றல் #பவித்ரா #Pavithra heading into Big screen Details Soon..
— Nikil Murukan (@onlynikil) November 6, 2021
Best Wishes….@pavithra.janani@onlynikil #NM pic.twitter.com/xWdeu4PyfH