இது என் பர்சனல் லைஃப்.. பிக் பாஸ் பவித்ரா நெகடிவ் கமென்ட்டுகளுக்கு பதிலடி
பிக் பாஸ் 8ம் சீசன் முடிவடைந்த பிறகு போட்டியாளர்கள் எல்லோரும் வெளியூர் வெளிநாடு என தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு எல்லாம் ட்ரிப் சென்று வருகிறார்கள்.
அதன் புகைப்படங்களை எல்லாம் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பிக் பாஸ் 8ல் பைனல் வரை வந்த பவித்ரா தற்போது பர்வதமலை மீது ஏறி சாமி தரிசனம் செய்திருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் உடன் ரயான் சென்று இருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் போட்ட கமெண்டுகள் பெரும்பாலும் நெகடிவ் ஆக தான் இருந்தது.
இது என் பர்சனல்
இந்நிலையில் நெகடிவ் கமெண்டுகளுக்கு பதிலடி கொடுத்து இருக்கும் பவித்ரா, 'இது என் பர்சனல் லைப். யாருடன் ட்ரிப் செல்லவேண்டும் என முடிவெடுப்பது என் பர்சனல் சாய்ஸ்' என கூறி இருக்கிறார்.
அவர் போட்டிருக்கும் பதிவை பாருங்க.
