அமீருடன் எப்போது திருமணம்- ரசிகரின் கேள்விக்கு பாவ்னி கொடுத்த நச் பதில்
பிக்பாஸ் 5 சீசன் வரை காதல் ஜோடி இணையாத சீசனே கிடையாது. ஒவ்வொரு சீசனிலும் ஜோடிகள் இருந்தார்கள்.
அப்படி 5வது சீசனில் ரசிகர்களால் கிசுகிசுக்கப்பட்ட ஒரு ஜோடி பாவ்னி மற்றும் அமீர்.
நிகழ்ச்சி பாவ்னி கூறிய பதில்
மகளிர் தின ஸ்பெஷலாக சென்னையில் உள்ள ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார் பாவ்னி. அதில் அவர், தனக்கு நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி.
முதலில் இருந்து நான் நாமினேஷனில் இருந்தாலும் என்னை காப்பாற்றியதற்கு நன்றி என்றார்.
பெண்கள் எப்போது தைரியமாக இருக்க வேண்டும், திருமணம் செய்த பெண்கள் கணவரை எதிர்ப்பார்க்காமல் தனியாக தன்னை பார்த்துக் கொள்ள வேண்டும் என சில விஷயங்களை பேசியுள்ளார்.
அமீருடன் திருமணம் பற்றி பாவ்னி
அமீருடன் திருமணம் குறித்து கல்லூரி மாணவர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு அவர், எனக்கு வீட்டில் மாப்பிள்ளை தேடிக்கொண்டு தான் வருகிறார்கள். ஆனால் நானும் அமீரும் நல்ல நண்பர்கள், நீங்கள் கூறுவது போல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
கின்னஸ் சாதனை செய்த அபியும் நானும் சீரியல் புகழ் நிதிஷ்- கொண்டாட்டத்தில் குடும்பம்