அமீர் காதலை ஏற்றுக்கொண்ட பாவனி! கையில் மோதிரத்துடன் இருக்கும் புது போட்டோ இதோ
பிக் பாஸ் 5ம் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர் அமீர். அவர் மற்றொரு போட்டியாளராக பாவனியை காதலிப்பதாக கூறி அந்த ஷோவிலேயே ப்ரொபோஸ் செய்தார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்த ஷோ முடிந்து தற்போது பிபி ஜோடிகள் ஷோவில் அவர்கள் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் எபிசோடின் ப்ரொமோ வெளியாகி வைரலாகி இருக்கிறது.
அதில் அமீர் பாவனியிடம் மீண்டும் ப்ரொபோஸ் செய்கிறார். ஆனால் அந்த மோதிரத்தை பாவனி வாங்கினாரா இல்லையா என்பது ப்ரோமோவில் காட்டப்படவில்லை.
ஆனால் தற்போது பாவனி கையில் மோதிரத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை அமீர் வெளியிட்டு இருக்கிறார்.
அந்த ப்ரோமோவில் பாவனியில் வலதுகை விரலில் மோதிரம் இல்லை, ஆனால் போட்டோவில் இருக்கிறது. அதனால் அவர்கள் இருவரும் காதலை உறுதி செய்துவிட்டது தெரியவந்திருக்கிறது.


மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
