பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பாவ்னி கமிட்டானாரா?- அவரே கொடுத்த பேட்டி
பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் சரித்திரத்தில் காதலர்கள் இல்லாமல் நிகழ்ச்சி முடிந்திருக்கவே முடியாது. 100 நாட்கள் ஒரே வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் சிலர் காதலர்களாக மாறிவிடுகிறார்கள்.
அது பாலிவுட், தெலுங்கு, தமிழ் என எல்லா மொழி நிகழ்ச்சிகளிலும் நடந்துகொண்டிருக்கிறது. தமிழில் பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்களாக ரசிகர்களால் பேசப்பட்டவர்கள் அமீர் மற்றும் பாவ்னி.
ஆனால் அவர்கள் எஸ்.ஜே.சூர்யா வசனம் போல இருக்கு ஆனால் இல்லை என்பது போலவே நடந்து வருகிறார்கள்.
பிக்பாஸ் பிறகு பாவ்னி-அமீர் இருவரும் இணைந்து பேட்டி கொடுத்துள்ளார்கள். அதில் அமீரை பாவ்னியிடம் காதல் சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்க அதை அவர் செய்கிறார்.
உடனே பாவ்னி காமெடியாக எனக்கு வெளியே ஆள் உள்ளது என்று கூறியுள்ளார்.