விஜய் டிவி மீது பாவனி ரெட்டி அதிர்ச்சி புகார்! ஜூலி சொன்ன அதே குற்றச்சாட்டு
பிக் பாஸ் 5ம் சீசனில் ராஜு டைட்டில் வென்ற நிலையில் பிரியங்கா இரண்டாம் இடமும், பாவனி ரெட்டி மூன்றாம் இடமும் பிடித்தனர். பாவனி தற்போது ஷோ முடிந்தபிறகு நேரலையில் ரசிகர்களிடம் உரையாடி வருகிறார்.
அபினை - பாவனி பற்றி வெளிவந்த குறும்படம் பற்றி ஒரு ரசிகர் கேட்க, 'அபினை பிடிக்காது என சொன்னதற்கு முன்பு இருந்த வார்த்தைகளையும், பின்னர் இருக்கும் வார்த்தைகளையும் எடிட் செய்து விட்டனர்' என அவர் தெரிவித்து இருக்கிறார்.
விஜய் டிவி மீது பாவனி இப்படி ஒரு புகார் சொல்லி இருக்கும் நிலையில், முதல் சீசனில் ஜூலி இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை வைத்து இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். 'அந்த 5 செகண்ட் முன்னாடி இருக்கும் காட்சியை போட சொல்லுங்க' என ஜூலி கேட்டது குறிப்பிடத்தக்கது.
PAVNI REACTION OF KURUMPADAM IN ABHINAY MATTER?
— Syzz (@Syz244) January 21, 2022
This girl humour sense tho?,but please hear this explanation from her side?The way VJTV manipulate that video to project her in wrong way&also her explanation was ?
Please hear this out? @Pavani9Reddy #pavni #biggbosstamil5 pic.twitter.com/oyFjgll9LO