அல்லு அர்ஜுன் கைது விவகாரம், யாரும் எதிர்ப்பார்க்காத பதிலை கூறிய பவன் கல்யாண்
புஷ்பா 2
சுகுமார் அவர்களின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிக்க கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் புஷ்பா 2.
எல்லா நடிகர்களும் தங்களது படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க ஆசைப்படுவது போல் அல்லு அர்ஜுனும் திரையரங்கம் சென்றுள்ளார்.
அங்கு எதிர்ப்பாராமல் ஒரு பெண் உயிரிழக்க அவரது மகன் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சமீபத்தில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது.
அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்த நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்ததற்கு நடிகரே காரணம் என கைது செய்யப்பட்டார், பின் வெளியே வந்தார்.
பவன் கல்யாண்
இந்த நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அதற்கு நேர்மாறாக அவர் தெலுங்கானா போலீசாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மனதில் வைத்தே போலீசார் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
