வாரிசு படத்தின் பிரம்மாண்ட ப்ரீ-ரிலீஸ் விழா.. கெஸ்டாக வரும் 2 டாப் நடிகர்கள்?
வாரிசு படத்தின் விழாவில் இரண்டும் முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வர இருக்கிறார்கள்.
வாரிசு
வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இப்படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார்,வம்சி படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் படத்தில் சரத்குமார், ரஷ்மிகா மந்தனா, ஷாம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு வெளியாகிய வாரிசு படத்தின் ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி பாடல்கள் தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.
வாரிசு அப்டேட்
வாரிசு ட்ரைலருக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், படத்தின் ஆடியோ லான்ச் வரும் டிசம்பர் 24ம் தேதி இருக்கலாம் என அப்டேட் கொடுத்துள்ளார் வாரிசு படத்தில் நடித்துள்ள கணேஷ்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெறவுள்ள வாரிசு படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் பவன் கல்யாண் மற்றும் மகேஷ் பாபு பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.
நடிகை ரெஜினா பிரபல நடிகரை காதலிக்கிறாரா? யார் அந்த நடிகர் தெரியுமா

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
