மூன்று முறை திருமணம், மூன்று முறை விவாகரத்து!! பவன் கல்யாணின் திருமண வாழ்க்கை

By Karthick Raja Nov 10, 2026 03:40 AM GMT
Report

Pawan kalyan marriage history: பிரபல நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவி Anna Lezhneva-வை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடைய திருமண வாழ்க்கை குறித்து சில தகவல்கள் உலா வருகின்றன; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயண 5 நாட்கள் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயண 5 நாட்கள் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்

பவன் கல்யாண்

தெலுங்கு திரையுலகில் பவர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் பவன் கல்யாண். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான They Call him OG திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சினிமாவை தாண்டி அரசியலில் களமிறங்கிய பவன் கல்யாண், 2008-ஆம் ஆண்டு முதல் அரசியலில் களமிறங்கினார். நீண்ட நாட்கள் அரசியலில் பயணித்து வந்த இவர், தற்போது ஆந்திராவின் துணை முதல்வராக உள்ளார்.

மூன்று முறை திருமணம், மூன்று முறை விவாகரத்து!! பவன் கல்யாணின் திருமண வாழ்க்கை | Pawan Kalyan Marriage History

திருமண வாழ்க்கை - முதல் திருமணம்

பவன் கல்யாண் கடந்த 1997-ஆம் ஆண்டு நந்தினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் 1999-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர். பின், 2008-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

மூன்று முறை திருமணம், மூன்று முறை விவாகரத்து!! பவன் கல்யாணின் திருமண வாழ்க்கை | Pawan Kalyan Marriage History

இரண்டாம் திருமணம்

2009-ஆம் ஆண்டு ரேனு தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் பவன் கல்யாண். இவர்களுக்கு அகிரா நந்தன் மற்றும் ஆத்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். 2012-ஆம் ஆண்டு ரீனு தேசாய் - பவன் கல்யாண் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

மூன்று முறை திருமணம், மூன்று முறை விவாகரத்து!! பவன் கல்யாணின் திருமண வாழ்க்கை | Pawan Kalyan Marriage History

மூன்றாவது திருமணம்

பின், 2013-ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த Anna Lezhneva என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார் பவன் கல்யாண். இவர்களுடைய திருமண வாழ்க்கை 13 வருடங்கள் நீடித்த நிலையில், இன்று தங்களது பிரிவை அறிவித்துள்ளனர். இவர்களுடைய விவாகரத்து செய்து ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. பவன் கல்யாண் - Anna Lezhneva தம்பதிக்கு Polena Anjana Pawanova மற்றும் Mark Shankar Pawanovich என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை திருமணம், மூன்று முறை விவாகரத்து!! பவன் கல்யாணின் திருமண வாழ்க்கை | Pawan Kalyan Marriage History

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US