பவன் கல்யாணின் OG படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் வேட்டை.. இதுவரை எவ்வளவு தெரியுமா
OG
இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் They Call Him OG. இப்படத்தை DVV என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து முதல் முறையாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், OG திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் ஆரம்பமாகியுள்ளது. இதுவரை நடைபெற்ற உலகளவிலான ப்ரீ புக்கிங்கில் ரூ. 48+ கோடி வசூலை அள்ளியுள்ளது.

இதில் இந்தியாவில் மட்டுமே ரூ. 21+ கோடி வசூல் செய்துள்ளது. ரிலீஸுக்கு முன் எவ்வளவு வசூல் செய்து சாதனை படைக்கப்போகிறது இந்த OG என பொறுத்திருந்து பார்ப்போம்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri