அந்த மாதிரி torture செய்த ஜிம் பயிற்சியாளர்.. பிரபல நடிகை போலீசில் புகார்
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் பாயல் சர்க்கார். இவர் பல ஹிந்தி வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
மேலும் பல வங்கமொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
போலீசில் புகார்
சமீபத்தில் பாயல் சர்க்கார், ஜிம் பயிற்சியாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், " யாரோ ஒருவர் என்னுடைய மொபைல் போனுக்கு பல ஆபாச செய்திகள் அனுப்பியுள்ளனர். அது யார் என்று விசாரித்த போது என் ஜிம் பயிற்சியாளர் என்பது தெரியவந்துள்ளது. ஆவர் என்னுடைய உறவினரும் ஆவார்."
"அவரின் நம்பரை நான் பிளாக் செய்துவிட்டேன். இதன் பின்னரும் அவர் என்னை தொந்தரவு செய்தார். என்னுடைய முகத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று பயமுறுத்தினார்" என்று கூறியுள்ளார்.
வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிக்க சரத்குமார் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா