பிரபுதேவாவின் பெண்ணின் மனதை தொட்டு பட நடிகை ஜெயா சீலை நியாபகம் உள்ளதா?.. இவ்வளவு பெரிய மகன்களா, போட்டோஸ்
ஜெயா சீல்
பாலிவுட் சினிமாவில் 1999ம் ஆண்டு வெளிவந்த அமிர்தா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெயா சீல்.
2000ம் ஆண்டே தமிழில் பிரபுதேவாவுடன் இணைந்து பெண்ணின் மனதை தொட்டு படத்தில் நடித்து அறிமுகமானார்.
எழில் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பிரபுதேவா, சரத்குமார், விவேக், தாமு, வையாபுரி, மயில்சாமி, கனல் கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் செம ஹிட் தான்.
இப்படத்திற்கு பிறகு ஜெயா சீல் கலகலப்பு, சாமுராய் போன்ற படங்கள் நடித்தார், அதன்பின் தமிழ் பக்கம் காணவில்லை. கடைசியாக 2018ம் ஆண்டு ஒரு பெங்காலி படத்தில் நடித்திருந்தார்.
லேட்டஸ்ட்
சினிமா பக்கமே வராமல் இருக்கும் ஜெயா சீல் திருமணம், இரண்டு குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார்.
இதுதவிர Bihu நடனப் பயிற்சியையும் நடத்தி வருகிறார். இதோ ஜெயா சீல் தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ்,