சைலண்டாக சம்பவம் செய்த அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் 1 திரைப்படம்!!
மிஷன் சாப்டர் 1
நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் பொங்கல் முன்னிட்டு வெளியானது.
இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபிஹசன், பேபி இயல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
விமர்சனம்
மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியான அதே தினத்தில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது.
இந்த இரண்டு படங்களை காட்டிலும் மிஷன் படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைத்தது. இருப்பினும் படத்தை பார்த்த மக்கள் மிஷன் படத்தை பாராட்டி தள்ளி வருகின்றனர்.
இதனால் இப்படத்தை பல திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டு வருவதாக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
