போகப்போக என்னை பற்றி தெரியும்.. தனுஷ் சொன்ன அதிரடி விஷயம்
தனுஷ்
நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகம் காட்டி வருகிறார். பவர் பாண்டி, ராயன் போன்ற படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இயக்கியிருக்கும் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இம்மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
சினிமாவில் தற்போது பிஸியாக வலம் வந்தாலும் அவ்வப்போது தனிப்பட்ட வாழ்க்கையில் சில சர்ச்சைகளில் மாட்டி கொள்கிறார் தனுஷ். இந்நிலையில், தனுஷ் முன்பு பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிரடி தகவல்
அதில், "என்னை புரிந்துகொள்வது உண்மையிலேயே கொஞ்சம் கடினமான விஷயம். என்னிடம் நெருக்கமாக பழகும் போது தான் என்னை பற்றி அவர்களுக்கு தெரிய வரும்.
அதுவும், நான் எளிதில் எல்லாம் க்ளோஸ் ஆக மாட்டேன், அதற்கு சில நாட்கள் தேவை. நான் ஒரு படத்தில் சொல்லும் வசனம் போன்று தான் ' என்னை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்' அதுபோல என்னிடம் பழக பழகத்தான் என்னை பற்றி புரிந்து கொள்ள முடியும்" என்று கூறியுள்ளார்.