சூர்யாவிற்கு பிரச்சனை கொடுத்தால் பாம்புகளை தூக்கி எறிவோம், பழங்குடி மக்கள் அதிரடி

suriya jai bhim
By Kathick Nov 22, 2021 12:00 PM GMT
Report

தென்னிந்திய அளவில் முன்னனி நடிகராக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் கடந்த 2-ந் தேதி வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ள படம் ஜெய் பீம்.

பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து போராடும் கதை கருவை கொண்ட ஜெய் பீம் படத்திற்கு இந்திய அளவில் பெரும் ஆதரவு கிடைத்திருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் படத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

படத்தில் வன்னியர் சமூகத்தை காயப்படுத்தும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக இவர்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனரான ஞானவேல் தன் வருத்தத்தையும் நேற்று அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவங்களுக்கடுத்து மதுரையில் பழங்குடியின மக்களே நேரடியாக சூர்யாவிற்கு தங்களின் ஆதரவை சாலையில் இறங்கி தெரிவித்திருக்கின்றனர்.

சூர்யாவிற்கு அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது பாம்பைக்கொண்டு எறிவோம் என கூறி பாம்பு எலிகளுடன் சாலையில் வந்து தங்களின் ஆதரவை தெரிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US