விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இவருடைய கடைசி படம் ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். திரையுலகில் எவர் க்ரீன் ஜோடிகளில் விஜய் - திரிஷா உள்ளனர். திருப்பாச்சி, கில்லி, ஆதி, குருவி, லியோ என ஐந்து திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு திரிஷா நடனமாடி இருந்தார். இதில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் விஜய்யுடன் திரிஷா இணைந்து நடித்த படம் திருப்பாச்சி. இந்த படத்தில் இவர்கள் இருவருடைய ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
13 Years of Thuppakki: பிளாக்பஸ்டர் துப்பாக்கி படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பேரரசு பேட்டி
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் பேரரசு பேட்டி ஒன்றில் படப்பிடிப்பில் திரிஷா செய்த விஷயம் குறித்து பேசியுள்ளார்.

"திருப்பாச்சி படப்பிடிப்பு நேரத்தில், விஜய்யை 'வாடா போடா'ன்னு சொல்ல திரிஷா பயந்துவிட்டார். 'அவர் எவ்வளவு பெரிய நடிகர், அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்' என்று சொல்லி அப்படி பேச மாட்டேன் என கூறிவிட்டார். வசனத்தை மாற்றலாமா என கேட்டார். அதன்பின், விஜய் சார்தான் வந்து, இப்படி பேசுங்க, ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க' என்று கூறினார்" என பேரரசு தெரிவித்துள்ளார்.