ப்ளூ சட்டை மாறனை தாக்கிய இயக்குனர் பேரரசு! அடுத்த படத்தை விமர்சிக்க உனக்கு தகுதியே இல்லை..
ப்ளூ சட்டை மாறன்
சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ஆன்டி இண்டியன் என்ற படத்தின் மூலமாக இயக்குனர் ஆனார்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் படத்திற்கு விமர்சனம் சொன்ன ப்ளூ சட்டை மாறன் முதலில் படத்தை புகழ்ந்து பேசுவது போல பேசிவிட்டு, அதன் பின் படத்தை மோசமாக விமர்சித்து பேசி இருந்தார். அது பற்றி தற்போது இயக்குனர் பேரரசு கோபமாக அவரை தாக்கி பேசி இருக்கிறார்.
பேரரசு பதிலடி
'ஆன்டி இண்டியன் படத்தின் 2ம் பாகம், 3ம் பாகம் எடுக்க சொல்லுங்க. ஒரு படம் எடுத்து உன்னால வெற்றி கொடுக்க முடியல, அடுத்த படத்தை விமர்சிக்க உனக்கு தகுதியே இல்லை. விமர்சனம் நாகரிகமாக இருக்க வேண்டும். மனதை புண்படுத்தும்படி இருக்க கூடாது.'
"குறைகளை சுட்டிக்காட்டி சிந்திக்க வைங்க. அடுத்த படத்தில் அந்த குறைகள் வராமல் செய்வது தான் விமர்சனம். ஒரேடியாக விமர்சனம் செய்து சாவடிப்பது விமர்சனம் அல்ல.. அது கொலை" என பேரரசு தெரிவித்து இருக்கிறார்.
லூசு பெண்ணே பாடலை இந்த நடிகையை நினைத்து தான் எழுதினாராம் சிம்பு.. யார் அந்த நடிகை தெரியுமா

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
