நடிகை மீனாட்சி கோவிந்தராஜனை செருப்பால் அடித்த நபர்.. காரணம் இதுதானா
மீனாட்சி கோவிந்தராஜன்
சரவணன் மீனாட்சி சீரியலில் தனது பயணத்தை துவங்கி, 2019ல் வெளிவந்த சசி குமாரின் கென்னடி கிளப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் மீனாட்சி கோவிந்தராஜன்.
இதன்பின், வேலன், டிமாண்டி காலனி 2, கோப்ரா, 2கே லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் மீனாட்சி நடித்திருந்தார். இவர் கைவசம் தற்போது டிமாண்டி காலனி 3, காதலே காதலே, வந்தான் சுட்டான் ரிபீட்டு ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாக்கிங் செய்தி
சென்னை மதுரவாயலில் வசித்து வரும் நடிகை மீனாட்சி கோவிந்தராஜனின் தாயாரை ஜேம்ஸ் என்பவர் வீடு புகுந்து செருப்பால் அடித்துள்ளார். தடுக்க வந்த நடிகை மீனாட்சியையும் தாக்கியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சியின் தாயார் தன்னை செருப்பால் அடித்ததால், பழிவாங்க இப்படி செய்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அவர் மீது போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.