எஸ்.ஜே. சூர்யாவின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து விபத்து! ஒருவர் மரணம்..

By Karthick Raja Jun 03, 2026 03:50 AM GMT
Report

கில்லர்

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா 10 வருடங்களுக்கு பின் இயக்கி வரும் திரைப்படம்தான் கில்லர். இப்படத்தில் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியன் திரைப்படமாக கில்லர் உருவாகி வருகிறது.

எஸ்.ஜே. சூர்யாவின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து விபத்து! ஒருவர் மரணம்.. | Person Dies In Accident During Sjsurya Movie Shoot

விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களாக சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில்லில் படப்பிடிப்பு நடந்து வந்துள்ளது. 

ஒருவர் மரணம்

இந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணி அளவில் படப்பிடிப்பு தளத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

எஸ்.ஜே. சூர்யாவின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து விபத்து! ஒருவர் மரணம்.. | Person Dies In Accident During Sjsurya Movie Shoot

இதையடுத்து அவர்களை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அதில் மதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காயமடைந்த தினகரன், சூர்யா மற்றும் சக்திவேல் ஆகியோர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.ஜே. சூர்யாவின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து விபத்து! ஒருவர் மரணம்.. | Person Dies In Accident During Sjsurya Movie Shoot

பாம் ப்ளாஸ்ட காட்சிக்காக கேஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இதற்கு முன் இதே திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் எஸ்.ஜே. சூர்யாவிற்கும் விபத்து ஏற்பட்டு காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US