பெருசு மற்றும் ஸ்வீட்ஹார்ட் படங்களின் வசூல் எவ்வளவு தெரியுமா.. விவரம் இதோ
கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் வெளிவந்த பெருசு மற்றும் ஸ்வீட்ஹார்ட் திரைப்படங்களின் இரண்டு நாள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
பெருசு
வைபவ் நடிப்பில் இயக்குநர் இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பெருசு. இப்படத்தில் நிஹாரிகா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
18+ அடல்ட் காமெடி கதைக்களத்தில் உருவான இப்படம் இரண்டு நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், உலகளவில் இதுவரை ரூ. 1.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
ஸ்வீட்ஹார்ட்
ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் இணைந்து நடித்து அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஸ்வீட்ஹார்ட். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரித்திருந்தார்.
காதல் கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் முதல் இரண்டு நாட்களில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், 2 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 1.4 கோடி வசூல் செய்துள்ளது.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
