இறந்த பீட்டர் பால் என் கணவர் இல்லை! நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன்! - வனிதா
நடிகை வனிதா விஜயகுமாரை மூன்றாம் திருமணம் செய்ததாக கூறப்பட்ட பீட்டர் பால் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மரணம் அடைந்தார்.
அவரது மரணம் பற்றி வனிதா உருக்கமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். 'நீங்கள் எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்' என அவர் கூறி இருந்தார்.
பீட்டர் என் கணவர் இல்லை
இந்நிலையில் மீடியாவில் 'வனிதாவின் மூன்றாம் கணவர்' என தொடர்ந்து செய்தி வருவது பற்றி வனிதா தற்போது கோபமாக பேசி இருக்கிறார்.
"நான் சட்டப்படி பீட்டர் பாலை திருமணம் செய்யவில்லை. நாங்கள் 2020ல் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம், அதே ஆண்டு அது முடிவுக்கு வந்துவிட்டது."
"நான் அவர் மனைவி இல்லை, அவர் என கணவர் இல்லை. நான் சட்டப்படி சிங்கிள் தான், எனக்கு கணவர் இல்லை."
"நான் எதற்காகவும் துக்கத்தில் இல்லை, மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன்" என வனிதா குறிப்பிட்டு இருக்கிறார்.
விவாகரத்து பெற்றதை கொண்டாடிய சீரியல் நடிகை! வைரல் புகைப்படங்கள்