நடிகர் சூர்யாவுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் எடுத்துகொண்ட புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - ஆள் அடையாளமே தெரியவில்லையே
சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இதன்பின் சர்கார், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் தமிழ் திரையுலகில் இவருக்கு கிடைக்காதா ரசிகர்களின் ஆதரவு, தற்போது தெலுங்கில் இவர் நடித்து வரும் படங்களுக்கு கிடைத்துள்ளது.
ஆம் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிரேக், நாந்தி என இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில் உடல் எடை மெலிந்துபோய் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு தோற்றமளிக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்..