பிச்சைக்காரன் 2 திரை விமர்சனம்
கடந்த 2016ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த படம் பிச்சைக்காரன். இப்படம் ப்ளாக் பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 திரைப்படம் உருவாகவுள்ளது என அறிவிப்பு வெளிவந்தது.
ஆனால், இப்படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, நடித்துள்ளார். இன்று வெளிவந்துள்ள இப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களை திருப்திபடுத்தி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்
ரூ. 1 லட்சம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கும் விஜய் குருமூர்த்தி இந்தியாவின் 7வது பணக்காரனாக கருதப்படுகிறார். இவரிடம் இருந்து இந்த சொத்துக்களை அபகரிக்க விஜய் குருமூர்த்தி கம்பெனியின் CEO அரவிந்த் திட்டம் தீட்டி வருகிறார்.
இந்த சமயத்தில் மூளை மாற்று அறுவை சிகிச்சை பற்றி அரவிந்துக்கு தெரிய வருகிறது. இந்த மூளை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம், வேறொருவரின் மூளையை விஜய் குருமூர்த்தியின் உடலில் பொருத்தி, தான் சொல்வதை மட்டும் கேட்கும் ஒருவராக மாற்ற அரவிந்த் முடிவு செய்கிறார்.
அதற்காக பிச்சைக்காரன் சத்யாவை தேர்ந்தெடுத்து அவருடைய மூளையை விஜய் குருமூர்த்தியின் உடலில் பொருத்துகிறார்கள். பிச்சைக்காரன் சத்யா தனது சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்து தங்கையுடன் நடு ரோட்டிற்கு வந்து பிச்சையெடுக்கிறார். இப்படியொரு சூழ்நிலையில், தனது தங்கையையும் தொலைத்து விடுகிறார்.
சிறுவயதில் தொலைந்துபோன தனது தங்கையை தேடி திரியும் சத்யாவின் மூளை தற்போது இந்தியாவின் 7வது பணக்காரன் விஜய் குருமூர்த்தியின் உடலில் பொருத்தப்படுகிறது. சத்யா அதன்பின் விஜய் குருமூர்த்தியாக மாறுகிறார். அதன்பின் என்ன நடந்தது? சத்யாவின் தங்கைக்கு என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
ஹீரோவாக வரும் விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்துள்ளார். இதற்கு முன் இருந்த அவருடைய நடிப்பு இப்படத்தில் சற்று மேம்பட்டுள்ளது. ஹீரோயின் காவ்யா தாப்பர் நடிப்பு ஓகே. தேவ், ராதாரவி, யோகி பாபு ஆகிய மூவரும் கொடுத்ததை கட்சிதமாக செய்துள்ளனர்.
சிறுவன், சிறுமியாக நடித்த இருவரின் நடிப்பும் பிரமாதம் மற்றும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.
இயக்குனராக அறிமுகமாகியுள்ள விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்கள். எடுத்துக்கொண்ட கதைக்களம் சூப்பர். ஏன் ஏழையாகி கொண்டே போகிறான், அதற்கு என்ன காரணம், பணக்காரன் ஏன் இன்னும் மென்மேலும் பணக்காரன் ஆகிக்கொண்டே போகிறான் என்பதை அழகாக காட்டியுள்ளார்.
அதே போல் தங்கச்சி சென்டிமென்ட் ஒர்கவுட் ஆகியுள்ளது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கி இருந்தால் படத்திற்கு பலமாக அமைத்திருக்கும். பல காட்சிகள் நன்றாக இருந்தாலும் மோசமான VFX அதை கெடுத்துவிடுகிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
கோயில் சிலையே பாடலை தவிர வேறு எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. வழக்கமாக விஜய் ஆண்டனியின் இசை என்றால் ஆல்பம் ஹிட்டாகும், அது இந்த முறை தவறிவிட்டது. ஒளிப்பதிவு ஓகே. எடிட்டிங் படத்தை பல இடங்களில் காப்பாற்றுகிறது. ஆக்ஷன் காட்சிகளை இன்னும் கூட நன்றாக வடிவமைத்திருக்காலாம்.
நிறை
விஜய் ஆண்டனி நடிப்பு
சிறுவன், சிறுமியாக நடித்தவர்கள்
கதைக்களம்
தங்கச்சி செண்டிமெண்ட்
குறை
VFX காட்சிகள்
மொத்தத்தில் பிச்சைக்காரன் 2 மக்கள் மனதில் நிற்கும்
மணிகண்டன் குட் நைட் படத்தை விமர்சனம் செய்த லோகேஷ்.. என்ன சொன்னார் தெரியுமா?