சன் டிவி சீரியல் நடிகை ராணியை வலைவீசி தேடும் போலீஸ்... பரபரப்பு புகார்
சீரியல் நடிகை
அலைகள் என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ராணி.
அதை தொடர்ந்து அத்திப்பூக்கள், முன் ஜென்மம், வள்ளி, குலதெய்வம் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார். பல சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டியிருப்பார்.
அப்படி அவர் நல்ல கதாபாத்திரத்தில் நடித்த சீரியல் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலை கூறலாம்.
ரோஜாவுக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போது போலீசாக இவர்தான் உதவி செய்வார்.

பரபரப்பு புகார்
தற்போது தலைமறைவாகியுள்ள ராணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காரணம் கரூரில் ஹோட்டல் அதிபரிடம் ரூ. 10 லட்சம் மற்றும் கார் உள்ளிட்டவற்றை மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது.
இதனால் சீரியல் நடிகை ராணி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
