ரீமேக் செய்து விஜய் நடித்த படமே ரஜினி படத்தின் காப்பியா..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். விஜய்யின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில், ரசிகர்களால் இன்றும் மறக்கமுடியாத படம் என்றால், அது போக்கிரி தான்.
விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை போக்கிரி திரைப்படம் உண்டாக்கியது. பிரபு தேவா இயக்கத்தில் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட இப்படம், தமிழில் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது.
இந்நிலையில், மாபெரும் வெற்றிபெற்ற இப்படம், தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான பாண்டியன் படத்தின் கதைக்களம் போலவே உள்ளது என்று ரசிகர்களால் கூறப்படுகிறது.
போக்கிரி படத்தில், முதலில் விஜய் எப்படி தன்னை போலீஸ் என்று காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாரோ, அதே போல் தான் பாண்டியன் படத்திலும் ரஜினி இருப்பார்.
விஜய், ரவுடி கூட்டத்தின் உள்ளே நுழைந்து உண்மைகளை தெரிந்து கொண்டு, பின் அவர்களை எதிர்பார் .
இதை தான், ரஜினியும் பாண்டியன் படத்தில் செய்வார்.