நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டமா?- போலீசாரால் அடுத்த அதிரடி நடவடிக்கை
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர் நடிகை மீரா மிதுன்.
அதற்கு முன் இவரை மக்களுக்கு அவ்வளவாக தெரியாது, மாடலிங் துறையில் ஓரளவிற்கு வளர்ந்துள்ளார்.
பிக்பாஸ் முடிந்த பிறகு படங்கள் வாய்ப்பு கிடைத்து நடிப்பார் என்று பார்த்தால் எப்போதும் நடிகர்கள், இயக்குனர் குறித்து அவதூறாக பேசியபடி இருந்தார்.
அண்மையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசியிருந்ர்.
இதனால் அவர் மீது புகார்கள் எழும்பின, அந்த புகாரின் பேரில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுன் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.