பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்
பிக் பாஸ் 7ம் சீசன் தெலுங்கில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மறுபுறம் தெலுங்கில் ஏழாம் சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
அதில் பல்லவி பிரஷாந்த் என்பவர் டைட்டில் ஜெயித்தார், அமர்தீப் என்பவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. ஷோ முடிந்து வெளியில் வந்த பிறகு பல்லவி பிரஷாந்த் ரசிகர்கள் அதிகம் கூடி பேரணியாக சென்று இருக்கின்றனர்.
அப்போது அவர்கள் சில வாகனங்களையும், பேருந்துகளையும் தாக்கி சேதப்படுத்தி இருக்கின்றனர். அந்த வீடியோவும் வெளியாகி சர்ச்சை ஆகி இருந்தது.
கைது
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சில ரசிகர்களையும் வீடியோ ஆதாரத்தின் மூலம் கைது செய்தனர். ஆனால் பல்லவி பிரஷாந்த் தலைமறைவாக இருக்கிறார் எனவும் தகவல் வந்தது.
இந்நிலையில் இன்று போலீசார் இன்று பல்லவி பிரஷாந்தை கைது செய்திருக்கின்றனர். திடீர் புகழ் போதையில் இப்படி நடந்த சம்பவத்திற்கு காரணமான அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
నిన్ననే కదరా మాట్లాడుకున్నాం ఇతని గురించి, ఇంతలోనే అరెస్ట్ చేసేశారా?
— SKY (@SriKanthY_) December 20, 2023
అంత పెద్ద తప్పు అతనేం చేశాడు? పబ్లిక్ న్యూసెన్స్ చేసింది ఫ్యాన్స్ అనుకున్నానే?#PallaviPrasanth#BiggBossTelugu7 https://t.co/3j8bGeJbQv pic.twitter.com/v8UQw26fRl