பிக் பாஸ் அபினை மனைவியை தீவிரமாக தேடும் போலீஸ்! பல லட்சம் மோசடி செய்தாரா?
அபினை
நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் நடிகர் அபினை வட்டி. அவர் பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த நேரத்தில் அபினை இன்னொரு போட்டியாளராக பாவனியிடம் எல்லைமீறி நடந்து கொண்டது சர்ச்சை ஆனது.
அதனால் அபினையின் மனைவி அபர்ணா அவரை விவாகரத்து செய்ய போகிறார் என்றும் செய்தி வந்தது. ஆனால் ஷோ முடிந்த பிறகு அபினை - அபர்ணா இருவரும் சமரசமாகி ஒன்றாக இருந்து வருகின்றனர்.

மோசடி வழக்கு
துணிக்கடை நடத்தி வருகிறார் அபர்ணா. அவரது கடைக்கு துணிகள் சப்ளை செய்யும் ஒரு பேஷன் டிசைனர் தான் மஞ்சு.
மஞ்சுவின் மகளுக்கு மெடிக்கல் சீட் வேண்டும் என்பதை அறிந்துகொண்ட அபர்ணா அவரது நண்பர் மூலமாக வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் கேட்டிருக்கிறார்.
அதற்காக முதலில் 5 லட்சம் நண்பரின் கணக்குக்கு அனுப்ப சொல்லி இருக்கிறார். பணம் அனுப்பியபிறகு அவரும் ஒரு சான்றிதழை கொடுத்து இருக்கிறார். அதை கொண்டு சென்று மருத்துவ கல்லூரியில் அட்மிஷன் கேட்டபோது தான் அது போலியானது என்பது தெரியவந்திருக்கிறது.
அபர்ணாவும் துணி கடையை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்ட நிலையில், தற்போது சென்னை மாம்பலம் போலீஸ் நிலையத்தில் மஞ்சு புகார் அளித்து இருக்கிறார். மோசடி வழக்கு பதிவு செய்து அபர்ணாவை தற்போது போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்களாம்.

விடுதலை படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா! சென்சாரில் நீக்கப்பட்ட லிஸ்ட் இதோ
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu