பாக்கியலட்சுமி தொடர் இயக்குனர் மீது போலீசில் புகார்! அதிர்ச்சி தகவல்
விஜய் டிவியின் டாப் சீரியல் என்ற இடத்தை தற்போது பிடித்து இருக்கிறது. அதில் கோபி எப்போது சிக்குவார் என்கிற எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகா உடன் கள்ளக்காதலில் இருக்கும் கோபி, மனைவி பாக்யாவை எப்படியாவது விவாகரத்து செய்துவிட வேண்டும் என திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறார். பாக்யாவுக்கே தெரியாமல் விவாகரத்து பெற கோர்ட் வரை கூட்டி சென்று வந்துவிட்டார் அவர்.
இந்நிலையில் இந்த வாரம் மகன் செழியன் தனது மனைவி ஜெனியை விவாகரத்து செய்யப்போவதாக சொன்னதும் பாக்யா கோபமாக சென்று அவனது கன்னத்தில் அறைந்துவிடுவது போல காட்சிகள் வர இருக்கிறது. அதை பார்த்து கோபி கடும் அதிர்ச்சி அடைகிறார்.
சீரியல் மீது போலீஸ் புகார்
இந்நிலையில் தற்போது இந்த தொடர் மீது போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பாக்கியலட்சுமியின் மாமனார் பக்கவாதத்தால் பாதிக்கப்ட்டு படுத்த படுக்கையாக இருப்பது போல காட்டப்பட்டு வருகிறது.
அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த பிசியோதெரபிஸ்ட் மீது பாக்யாவின் மகள் இனியா காதல் கொள்கிறார். இது பற்றி அறிந்து குடும்பத்தினர் பிசியோதெரப்பிஸ்டையும் அவரது தொழிலையும் தவறாக பேசுவது போல் வருகிறது.
இதை எதிர்த்து இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பீஸ்ட் சென்சார் ரிசல்ட் வெளியானது! ரன்டைம் விவரம் இதோ