விஜய் டிவி செட்டுக்குள் திடீரென நுழைந்த போலீஸ்.. அதிர்ச்சியில் புகழ்!
விஜய் டிவி
விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவுக்கு காமெடியில் எல்லோரையும் சிரிக்க வைத்து வருகின்றனர்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் ரெடி ஸ்டெடி போ ஷோவின் மூன்றாவது சீசனை ரக்ஷன் மற்றும் VJ விஷால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
செட்டுக்குள் நுழைந்த போலீஸ்
இந்த வார எபிசோடில் புகழ் டீம் ஒரு பக்கமும், மைனா, சுனிதா உள்ளிட்டவர்கள் இன்னொரு டீமாக இருந்து ரெடி ஸ்டெடி போ ஷோவில் போட்டியிட்டனர்.
ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது செட்டுக்குள் இரண்டு போலீஸ் நுழைந்து இருக்கின்றனர். 'புகார் வந்திருக்கிறது, மேலிடத்தில் இருந்து அனுப்பினாங்க, என்ன நடக்கிறது என ரிப்போர்ட் எடுக்கணும்' என போலீஸ் கூறுகின்றனர். அதை புகழ் உள்ளிட்ட மற்றவர்கள் கடும் அதிர்ச்சி உடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் "பிராங்க் என்ற பெயரில் இன்னுமாடா இதை ஓட்டிகிட்டு இருக்கீங்க" என விஜய் டிவியை கலாய்த்து வருகின்றனர்.
ஒரு வேல prank ah இருக்குமோ ? #ReadySteadyPo - வரும் ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. ?? #RSP #VijayTelevision #VijayTV pic.twitter.com/RHbfIxpFTi
— Vijay Television (@vijaytelevision) August 17, 2023
20 கிலோ வரை எடையை குறைத்துள்ள பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை கிருத்திகா- எப்படி தெரியுமா?